காமராஜ் பொறியியல் கல்லூரியில் யோகா தின போட்டிகள்

விருதுநகர், ஜூன் 23: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு யோகா போட்டிகள் நடைபெற்றது. மாணவர் பிரிவில் 3ம் ஆண்டு மாணவர் வாசன், மாணவிகள் பிரிவில் முதலாம் ஆண்டு மாணவி நித்யா முதல்பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சிவனேஷ் குமார் பதக்கங்கள், பரிசுகளை வழங்கினார். கல்லூரி செயலாளர் தர்மராஜன், பொருளாளர் முருகன், முதல்வர் செந்தில் பாராட்டினர்.

The post காமராஜ் பொறியியல் கல்லூரியில் யோகா தின போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: