திண்டுக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

திண்டுக்கல், ஜூன் 23: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக நாட்டாமை காஜா மைதீன்,துணை தலைவர்களாக ராஜேந்திர குமார், சகாய செல்வராஜ், சாதிக், அரபு முகமது, சீனிவாசன், பொது செயலாளராக ராஜகோபால், உதவி செயலாளர்களாக முரளிதரன், சந்திரசேகரன், பொருளாளராக ஜாக்கி சங்கர், பொதுக்குழு உறுப்பினர்களாக மகேந்திரன், கணேசன், புஸ்பராஜ், விமல்ராஜ், விக்டர் ராஜ், மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகள் நலம் கருதி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஞானகுரு நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: