37 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

தேனி, ஜூன் 21: தேனி-அல்லிநகரத்தில் 37 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். தேனி அல்லிநகரம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை தணிக்கை செய்தனர். தணிக்கையின்போது வாகனத்திற்குள் அரசால் தடை செய்யப்பட்ட 37 கிலோ 125 கிராம் எடையுள்ள 2 ஆயிரத்து 475 பாக்கெட்டுக்களை கொண்ட புகையிலை பொருள்கள் 3 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்திச் சென்ற அல்லிநகரம் விஎம் சாவடி தெருவை சேர்ந்த திருவேங்கடம் மகன் ரெங்கராஜ் (49) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் புகையிலைப் பொருள்களை ஏற்றி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.

The post 37 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: