சாத்தூர் அருகே மிரட்டும் மேல்நிலை தண்ணீர் தொட்டி: குடியிருப்புகள் மீது இடிந்து விழும் அபாயம்

சாத்தூர், ஜூன் 20: சாத்தூர் அருகே சேதமடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது. சாத்தூர் அருகே எம்.நாகலாபுரம் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தண்ணீர் தொட்டி கட்டியுள்ளனர். அதன் வழியாக கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

தற்போது மேல்நிலை தண்ணீர் தொட்டி ஊராட்சி நிர்வாகத்தால் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யாததால் பல இடங்களில் விரிசல் விட்டு கம்பிகள் வெளியே தெரிந்து வருகிறது. மேலும் தண்ணீர் தொட்டி அருகே குடியிருப்புகள் உள்ளதால் தொட்டி இடிந்து குடியிருப்புகள் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மேல்நிலை தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சாத்தூர் அருகே மிரட்டும் மேல்நிலை தண்ணீர் தொட்டி: குடியிருப்புகள் மீது இடிந்து விழும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: