மேற்கு வங்கம் ஜல்தபாரா தேசிய பூங்காவில் உள்ள பங்களாவில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

மேற்கு வங்கம்: மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற பங்களா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மேற்குவங்கத்தில் அலிபூர்த்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜல்தவாரா தேசிய பூங்காவில் ஹோலாங் வன பங்களா புகழ்பெற்றது. ஒற்றைக்கொம்பு கண்டா மிருகங்களுக்கு பெயர்பெற்ற மூன்று மாடிகள் கொண்ட இந்த பங்களாவில் நேற்று இரவு தீ விபத்து நேரிட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு செல்வதற்கு முன்பு பங்களா முழுவதும் தீ பற்றியது. இதனால் தீயை அணைப்பதில் வீரர்களுக்கு சவாலாக இருந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாகவும் இந்த கட்டடம் முழுவதும் மரபலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டதால் தீ முழுவதும் பற்றி எரித்ததாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேற்கு வங்கம் ஜல்தபாரா தேசிய பூங்காவில் உள்ள பங்களாவில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: