சென்னை: திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரி வருவாய் 3,148 பில்லியனாக உள்ள நிலையில் குஜராத்துக்கு 1,796 பில்லியன் மட்டுமே வரி வருவாய் உள்ளது. சமூக வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு 65.34 என முன்னிலையில் உள்ளது.