ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பனை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-ஆக இருந்த முருங்கைக்காய் நாளுக்கு நாள் விலை அதிகரித்து ரூ. 100க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சாலைப்புதுார், கொல்லபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி சுற்றுப்பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மூலச்சத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் முருங்கைக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

கோடை மழை காரணமாக முருங்கை செடியில் இருந்த பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்துவிட்டன. வரத்து முற்றிலும் குறைந்த நிலையில், தூத்துக்குடியில் விளைந்த முருங்கையை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். தூத்துக்குடியிலும் மழையால் முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது. கடந்த 5- ஆம் தேதி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

The post ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: