அலங்கார மீன் வளர்க்க விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஜூன் 19:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் 1.5 ஹெக்டோர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒரு ஹெக்டோர் அலகிற்கான செலவினத்தொகை ரூ.7 லட்சத்தில் ரூ.4.20 லட்சம் மானியம் வழங்கப்படும். நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவில் 1 அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுப்பிரிவில் பயனாளிக்கு செலவினத்தை ரூ.8 லட்சத்தில் மானியமாக ரூ.3.20 லட்சம் வழங்கப்படும். திட்டத்தை செயல்படுத்த 150 ச.மீ அளவிலான இடம் போதுமானது.

பயன்பெற விரும்பும் பயனாளிகள் 15 நாட்களுக்குள் விருதுநகர் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 114,பி. 27/1 வேல்சாமி நகர், விருதுநகர் என்ற முகவரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 04562-244707 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post அலங்கார மீன் வளர்க்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: