கடும் வெயிலால் குறையும் அணைகளின் நீர்மட்டம்

வத்திராயிருப்பு, ஜூன் 19: கடும் வெயில் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. 47 அடி முழு கொள்ளளவு கொண்டது இந்த அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக உள்ளது. கோடை வெயிலால் அணையில் அதிகளவில் தண்ணீர் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது கடுமையான வெயில் காரணமாக அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்துள்ளது. இதேபோல் 42 அடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியாக உள்ளது. கடும் வெயில் காரணமாக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post கடும் வெயிலால் குறையும் அணைகளின் நீர்மட்டம் appeared first on Dinakaran.

Related Stories: