வேலூர் ராணுவ வீரர் நாக்பூரில் பஸ் மோதி பலி

அணைக்கட்டு:வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி- தவமணி தம்பதியின் 2வது மகன் விக்னேஷ்(23), ராணுவ வீரர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்து, கடைசியாக நாக்பூர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். விக்னேஷூக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து பெண் பார்க்கப்பட்டது. அவர் அடுத்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்ததும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடத்த இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி விக்னேஷ் ஆட்டோவில் புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பஸ் மோதியதில், படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, விக்னேஷ் உடல் நேற்று சொந்த ஊரான புலிமேடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ அதிகாரிகள் விக்னேஷின் உடல் மீது தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செய்தபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post வேலூர் ராணுவ வீரர் நாக்பூரில் பஸ் மோதி பலி appeared first on Dinakaran.

Related Stories: