நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்

சேலம், ஜூன் 19: சேலம் கன்னங்குறிச்சி சிவசங்கர் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மாற்றுத்திறனாளியான இவர், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மரம் ஏறும் போது தவறி விழுந்ததில், கால்களில் பாதிப்பு ஏற்பட்டு மாற்றுத்திறனாளி ஆனேன். வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்தேன். இந்நிலையில், சில மாதத்திற்கு முன்பு என்னுடன் சேர்ந்து 8 பேருக்கு கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் தலா 3 சென்ட் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

அந்த நிலத்தை அளவீடு செய்து வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அங்குள்ள சிலர் நில அளவீடு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

The post நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார் appeared first on Dinakaran.

Related Stories: