குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவில், ஜூன் 19 : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் வரை திடீர் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. பின்னர் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 14.4 மி.மீ மழை பெய்திருந்தது. தக்கலையில் 5.2 மி.மீ, பேச்சிப்பாறை 4.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. பூதப்பாண்டி, முக்கடல், குழித்துறை, ஆனைக்கிடங்கு உள்ளிட்ட இடங்களிலும் லேசான மழை பதிவாகி இருந்தது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.55 அடியாக இருந்தது. அணைக்கு 447 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 632 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.25 அடியாகும். அணைக்கு 178 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 16.14 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 150 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 16.24 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.9 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 40.27 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.8 அடியாகும்.

The post குமரியில் மீண்டும் சாரல் மழை appeared first on Dinakaran.

Related Stories: