முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் கண்களுக்கு விருந்தளித்த கொண்றை பூக்கள்

 

முத்துப்பேட்டை, ஜூன் 18: முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் ஜீன் மாதம் பூத்துக்குலுங்கும் மே பிளவர் என்ற கொண்றை பூக்கள், சாலையில் செல்லும் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் செல்லும் பாண்டிச்சேரி – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சில முக்கிய இடங்களில் மே பிளவர் என்ற கொண்றை பூக்கள் மரங்கள் உள்பட பலவிதமான மரங்கள் வைத்து வளர்க்கப்பட்டுள்ளது.

இந்த மரத்தில் வருடம் ஒருமுறை சிவப்பு நிற மலர்கள் மொத்தமாக பூத்து மரம் முழுவதும் நிறைந்து காணப்படும். அதுவும் மார்ச் மாதம் இறுதியில் பூ பூத்து காய் காய்த்து மே மாதம் இரண்டாவது வாரத்தில் வாய் மலர்ந்து அழகாக ஜூலை வரையில் 3 மாதத்திற்கு காட்சியளிக்கும். அதன்படி பாண்டி, எடையூர், கோபாலசமுத்திரம், உப்பூர் ஆலங்காடு, தம்பிக்கோட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது உப்பூர் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள கொண்றை மரத்தில் மே பிளவர் சமீபத்தில் கோடை மழையால் உரமாக வளர்ந்து தற்போது சிகப்பு நிறத்தில் ஜூன் மாத்தில் பூத்து குலுங்குவதால் சாலையினை கடப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. ரோட்டோரம் இருக்கும் இந்த மரங்கள் அருகே நின்று பலரும் “செல்பி” எடுத்து மகிழ்கின்றனர்.

The post முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் கண்களுக்கு விருந்தளித்த கொண்றை பூக்கள் appeared first on Dinakaran.

Related Stories: