இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல் திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறலாம்: அரியலூர் கலெக்டர் தகவல்

 

அரியலூர், ஜூன் 18: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மார்ச் 4 ம்தேதி துவக்கி வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம் வட்டங்களில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இனி பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும்.

மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (< https://eservices.tn.gov.in/ >) என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். “நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ- சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்பதும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் நத்தம் பட்டா மாறுதல் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுக்க காத்திருக்கும் நிலையினை தவிர்த்து, பொது மக்கள் அனைவரும் இணைவழியில் விண்ணப்பித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல் திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறலாம்: அரியலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: