இன்று மின் குறை தீர் கூட்டம்

சிவகங்கை, ஜூன் 18: திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வீரமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப்பத்தூரில் மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று, காலை 11மணி முதல் 1மணி வரை, நடக்க உள்ளது. இதில் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இன்று மின் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: