கொல்லங்கோட்டில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நித்திரவிளை, ஜூன் 18: திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு ஆதரவு கொடுத்ததன் காரணமாக நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடி, தொண்டர்களை தாக்கிய கும்பல் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லங்கோடு வட்டாரக்குழு சார்பில் கண்ணனாகம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லங்கோடு வட்டாரக்குழு செயலாளர் அஜித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் தொடக்கி வைத்து பேசினார். வட்டாரக்குழு உறுப்பினர்கள் சுனில்குமார், செல்லப்பன், கிறிஸ்துதாஸ், ஸ்டீபன், சுரேஷ், கிளை செயலாளர்கள் எட்வின், சுகுமாரன் நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொல்லங்கோட்டில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: