தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து

தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தூத்துக்குடி சண்முகபுரம் சந்தை ரோட்டில் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த டட்லி என்பவருக்குச் சொந்தமான சவுண்ட் சர்வீஸ் கடை உள்ளது . இந்த கடையில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது . இந்த தீ அருகில் இருந்த மாவு மில், இரும்பு பட்டறை ஆகிய கடைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கும், தென்பாகம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீய அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராமல் கொழுந்து விட்டு எரிந்ததால், மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் அணி தீவிர படுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் சவுண்ட் சர்வீஸ் கடையில் இருந்த சவுண்ட் சர்வீஸ் பொருட்கள், டெக்கரேஷன் பொருட்கள் , பல்புகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தீ விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: