உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் காய்கறி விளைச்சல் குறைந்து விட்டதால், உழவர் சந்தைகள், வாரச்சந்தை மற்றும் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தவிர, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து, காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இம்மாதம் 1ம் தேதி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ₹20 ஆக இருந்தது, தற்போது ₹40 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கத்தரிக்காய் ₹28ல் இருந்து ₹30 ஆகவும், பீன்ஸ் ₹100ல் இருந்து ₹140 ஆகவும், கேரட் ₹70ல் இருந்து ₹90 ஆகவும், உருளைக்கிழங்கு ₹36ல் இருநது ₹44 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

The post உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: