டூவீலரில் கர்நாடக மது கடத்தியவர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூன் 21: தேன்கனிக்கோட்டை எஸ்ஐ பட்டு மற்றும் போலீசார், நேற்று வனத்துறை சோதனை சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்தவரிடம், சோதனை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மது பாட்டில் 30 கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டியை சேர்ந்த பிரபாகரன் (44) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ₹2100 மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post டூவீலரில் கர்நாடக மது கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: