கிருஷ்ணகிரி விவசாயியிடம் ₹5.22 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே களரம்பதி சின்னஹலேரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (31). விவசாயியான இவரது செல்போனுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி ஆன்லைனில் வர்த்தகம் செய்வது தொடர்பாக லிங்க் ஒன்று வந்தது. அந்த லிங்கில் சென்று வீரமணி பார்த்த போது, பணத்தை கட்டினால் உடனுக்குடன் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி, 6 முறையாக வீரமணி ₹5 லட்சத்து 22 ஆயிரத்து 440 கட்டினார். ஆனால், அவர்கள் கூறியபடி இரட்டிப்பு லாபம் கிடைக்கவில்லை. மேலும், அந்த லிங்கையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி விவசாயியிடம் ₹5.22 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: