தீக்குளிக்க முயன்ற தாய்- மகள் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 26: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா தேன்துர்க்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை(41). இவரது மகள் ராஜலட்சுமி(23). நிலப்பிரச்னை தொடர்பாக இவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா எஸ்எஸ்ஐ சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post தீக்குளிக்க முயன்ற தாய்- மகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: