கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடங்கியது. விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களில் 21 பேரின் உடல்கள் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரை பகுதியில் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் உடல்கள் தகனம் செய்வது சிறிது நேரம் தடைபட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது உயிரிழ்ந்தோரின் உடல்களை ஒவ்வொன்றாக தகனம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.

உயிரிழ்ந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபிறகு உடல்கள் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. மயானத்தைல் பலத்த காற்றுடன் கனமழைபெய்தது. மழை சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் தகனம் செய்யும் பணிகள் தொடங்கியது. மழையால் விறகுகள் நனைந்ததால் உடல்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையால் தொடர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி உடலை எரியூட்டும் பணி நடைபெறுகிறது.

The post கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: