கேரளாவில் இன்று காலை திடீர் நில அதிர்வு: அலறியடித்து மக்கள் ஓட்டம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் 2 மாவட்டங்களில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் இன்று காலை பல்வேறு இடங்களில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. காலை 8.15 மணியளவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பல வீடுகளில் பாத்திரங்கள் உருண்டதாகவும், வீடுகள் குலுங்கியதாகவும் அப்பகுதியினர் கூறினர்.

இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். 4 வினாடிகள் மட்டுமே இந்த நில அதிர்வு காணப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. இதே சமயத்தில் பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சாலிசேரி, கக்காட்டிரி, திருமிற்றக்கோடு, நாகலசேரி, கோட்டப்பாடம், மதுப்பள்ளி, கோதச்சிரா, எழுமங்காடு, கப்பூர் மற்றும் குமாரநெல்லூர் ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து இடி முழக்கம் போல் சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் கூறினர். இதனால் இந்தப் பகுதியிலுள்ள மக்களும் கடும் பீதியடைந்தனர்.

The post கேரளாவில் இன்று காலை திடீர் நில அதிர்வு: அலறியடித்து மக்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: