சிஇஓ அலுவலகம் முன்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 15: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இஎல் ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். 2009க்கு பின்பு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டை சரி செய்திட வேண்டும். புதிய ஊதிய குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டு தோறும் உறுதி ெசய்திட வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டிப்பது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அளித்து வரும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பென்னட் ஜோஸ் தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளி மாநில செயலாளர் அஜின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஷிபு விளக்கவுரையாற்றினார். ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஷீபாமோள், கிறாஸ் ஞானஜில்ட், கே.எம்.வேலவன், டோமினிக் ராஜ், நாகராஜன், டயஸ், எட்வின் பிரகாஷ், கண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தை அய்யப்பன்பிள்ளை முடித்துவைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் காஜா கமாலுதீன் நன்றி கூறினார்.

The post சிஇஓ அலுவலகம் முன்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: