விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் விருதுநகர் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 3,80,877 வாக்குகளை பெற்றதோடு, சுமார் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனிடையே விருதுநகர் மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகர் நேற்று முன்தினம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். விரிவான தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் தொடர்பான ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது. மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு தேடிக் கொள்ள முடியும் என்று கூறினார்.

The post விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: