நான் முதல்வன் திட்டத்தால் 76.4% பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் : தமிழ்நாடு அரசு பெருமிதம்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைததார்.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்த 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள் :

கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் பாலமாக இருந்து செயல்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் 76.4 % பொறியியல் மாணவர்களும், 83.8 % கலை அறிவியல் மாணவர்களும் 2022-23ம் கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்

1,84,283 மாணவர்கள் நான் முதல்வனில் பதிவு செய்ததில், 1,48, 149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ.பி, கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது

உயர் கல்வியில் படிக்கும் மாணவர்களை நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் கொண்ட மாணவர்களாக மாற்றுவதற்காக வருடத்திற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில் நான் முதல்வன் திட்டம், மார்ச் 2022ல் தொடங்கப்பட்டது

முதல் கல்வியாண்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையான 10 லட்சத்திற்கும் அதிகமாக, 13 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், ரோபோடிக்ஸ், மின் வாகனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது

2023-24ம் கல்வி ஆண்டில் நான் முதல்வன் திட்டம் ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2085 கல்லூரிகளில் படிக்கும் 14 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பெற்ற 1,48,149 மாணவர்கள் : சாதனை படைக்கும் நான் முதல்வன் திட்டம் !

**பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன்**

2023-24 கல்வியாண்டில் 38 தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 59 பிரிவில் பயிற்சி வழங்கப்பட்டது

2023-24ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் 9,842 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

348 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 3 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பதிவுசெய்தனர், இவர்களுக்காக 26 தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 59 துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது

**கலை அறிவியல் கல்லூரிகளில் நான் முதல்வன்**

2023-24ம் கல்வியாண்டில் 10 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 394 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது

153 அரசு கல்லூரிகள் உட்பட 827 கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த 8,53,605 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

*பாலிடெக்னிக் கல்லூரியில் நான் முதல்வன்*

2023-24ம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 13 நிறுவனங்களுடன் இணைந்து 10 துறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது*

2023-24ம் கல்வி ஆண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய விரிவுரையாளர்கள் 9,389 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

459 பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த 1,92,784 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றனர்

*ஐடிஐ கல்லூரிகளில் நான் முதல்வன்*

2023-24ம் கல்வியாண்டில், 412 ஐடிஐ கல்லூரிகளை சேர்ந்த 64,149 மாணவர்களுக்கு 4 தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

*போட்டித் தேர்வர்களுக்கான நான் முதல்வன்*

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் தேர்வுகளுக்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1000 போட்டித் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதம் ரூ. 7,500 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது

அவர்கள் முதன்மை தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 453 தேர்வர்கள் 2023 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இவர்களுக்கு ரூ.1,13, 25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 39 பேர் சிவில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளனர்.

The post நான் முதல்வன் திட்டத்தால் 76.4% பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் : தமிழ்நாடு அரசு பெருமிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: