சாலை நடுவே உள்ள கால்வாய் சிமென்ட் கான்கிரீட் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பண்ருட்டி : சாலை நடுவே உள்ள மெகாசைஸ் பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம் ஊராட்சியில் 8 வது வார்டு எல்லையம்மன் கோயில் தெருவில் குழந்தைகள் நல மையம், ஆரம்ப சுகாதார மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஊராட்சி சார்பில், முக்கிய சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 8 வது வார்டு எல்லையம்மன் கோயில் தெருவில் மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் கான்கிரீட் தளத்தில் திடீரென பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் போது இப்பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.

இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், பல மாதங்களை கடந்தும் சாலை நடுவே உள்ள பள்ளத்தை இது வரை சரிசெய்யப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலை நடுவே ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சாலை நடுவே உள்ள கால்வாய் சிமென்ட் கான்கிரீட் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: