ஈரோட்டில் காட்டு யானை தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நபருக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவு

 

 

சென்னை: ஈரோட்டில் காட்டு யானை தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆள்மாதன் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், எரகனஹள்ளி கிராமத்தில் வசித்துவரும் ஆள்மாதன் (வயது 60) என்பவர் கடந்த 13.12.2025 அன்று காலை சுமார் 7.00 மணியளவில் வீட்டிற்கு அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து கர்நாடக மாநிலம், மைசூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆள்மாதன் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர் விரைவில் நலம்பெற விழைகிறேன். மேலும், சிகிச்சை பெற்றுவருபவரின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

Related Stories: