தா.பழூரில் விவசாய தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம்

 

தா.பழூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் தா.பழூர் துவக்கப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகிகள் சாமிதுரை, பன்னீர்செல்வம், காசிநாதன், ரவி, சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் அம்பிகா, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தா.பழூர் ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன், திருமண உதவித் தொகை, மருத்துவம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது. மாவட்ட குழு மீனா நன்றி கூறினார்.

The post தா.பழூரில் விவசாய தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: