வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற ஏட்டு கைது

மதுரை: மதுரை நகர் தனிப்பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 2 சிறுவர்கள் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கினர். விசாரித்தபோது, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் (58), தங்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்று வரும்படி கூறியதாக தெரிவித்தனர். இதையடுத்து சுப்புராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக பணிபுரியும் ஆத்திகுளத்தை சேர்ந்த பாலமுருகன் (50), வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்து தரும்படி தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ஏட்டு பாலமுருகன் வீட்டில் சோதனை செய்ததில் அங்கு பதுக்கியிருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து திலகர் திடல் ேபாலீசார் வழக்கு பதிந்து ஏட்டு பாலமுருகன், சுப்புராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

The post வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற ஏட்டு கைது appeared first on Dinakaran.

Related Stories: