காணாமல் போன குளத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் குடியாத்தம் அருகே ருசிகரம் ‘கிணத்த காணோம்’ சினிமா பாணியில்

குடியாத்தம், ஜூன் 14: குடியாத்தம் அருகே காணாமல் போன குளத்தை ேதடி கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். னிமாவில் நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சியில் ‘கிணத்த காணோம்’ என்று தேடுவதை போல குளத்தை காணோம் என்று அதிகாரிகள் தேடிவரும் ருசிகர சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சியில் ஈச்சமரம் குட்டை கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் குளம் இருந்துள்ளது. இதில் ஆந்திர மாநில மலை மற்றும் வனப் பகுதியில் பெய்யும் மழை நீர் காணாறு வழியாக சென்று இக்குளத்தில் தேங்கி இருந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு பயன்பட்டு வந்துள்ளது. மேலும் இக்கிராமத்தில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு சென்று வரும்போது காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த குளத்தில் தண்ணீர் அருந்திவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குளத்தை சுற்றி அருகில் உள்ள நில உரிமையாளர்கள் சிலர் குளத்தை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் இந்த இடத்தில் ஆழ்துளை கிணறும் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திமேஷ் குளத்தை காணவில்லை. கண்டுபடித்து தரும்படி மனு அளித்திருந்தார். தன்படி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் குளத்தை கண்டுபிடிக்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த 2 தினங்களாக குடியாத்தம் ஒன்றிய பிடிஓக்கள் கல்பனா, பெருமாள் நில அளவை ராஜசேகர், விஏஓ செந்தில் ஆகியோர் ஈச்சமர குட்டை கிராமத்திற்கு சென்று குளத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அருகில் உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. அங்கு மரம், செடி, கொடிகள் அடர்ந்து புதர்களாக இருந்தது. அவற்றை பொக்லைன், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். பின்னர் முழுமையாக அளவீடு செய்யும் பணி துவங்கி குளம் கண்டுபிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post காணாமல் போன குளத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் குடியாத்தம் அருகே ருசிகரம் ‘கிணத்த காணோம்’ சினிமா பாணியில் appeared first on Dinakaran.

Related Stories: