‘சந்திரபாபு நாயுடு அனே நேனு..’ ஆந்திர முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: துணை முதல்வரானார் பவன் கல்யாண்!!

ஹைதராபாத் :ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையில் ஜனசேனை மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தனர்.இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 135 இடங்களில் தெலுங்கு தேசம் மட்டும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, விஜயவாடா புறநகர் பகுதியின் கண்ணவரத்தில் நடைபெறும் பிரமாண்ட பதவியேற்பு விழாவில், 4வது முறையாக ஆந்திர முதல்வராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மலர் கொத்து வழங்கி, கட்டித்தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றபின், தனது அண்ணன் நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் பவன் கல்யாண்.

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பால கிருஷ்ணன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ‘சந்திரபாபு நாயுடு அனே நேனு..’ ஆந்திர முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: துணை முதல்வரானார் பவன் கல்யாண்!! appeared first on Dinakaran.

Related Stories: