ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் நாயன்மார்களுக்கு குருபூஜை

ராசிபுரம், ஜூன் 12: ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் நாயன்மார்களுக்கு குருபூஜை நடந்தது. ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடப்பது வழக்கம். இங்குள்ள நாயன்மார்களுக்கு பல்வேறு குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். நமச்சிவாய வாழ்க சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், 14ம் ஆண்டாக நீரால் விளக்கேற்றிய நமிநந்தி, சேக்கிழார் ஆகியோருக்கு குருபூஜை விழா நடந்தது. நிகழ்ச்சியில் விநாயகர், கைலாசநாதர், அறம்வளர் நாயகி, நந்தி, சுப்ரமணியர், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் நாயன்மார்களுக்கு குருபூஜை appeared first on Dinakaran.

Related Stories: