மக்களவைத் தேர்தல் தோல்விக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: பினராயி விஜயன் சட்டசபையில் பேச்சு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் நேற்று பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது. எனவே தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றார். அதற்கு பினராயி விஜயன் பதிலளித்தபோது கூறியது: கேரளாவில் பாஜ கணக்கை தொடங்கியுள்ளது தான் எங்களுக்கு கவலை அளிக்கிறது. பல தொகுதிகளில் காங்கிரசின் ஓட்டுகள் தான் பாஜவுக்கு சென்றுள்ளது. இது எப்படி நடந்தது என்பது குறித்து நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்ததற்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களவைத் தேர்தல் தோல்விக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: பினராயி விஜயன் சட்டசபையில் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: