அந்தியூர் அருகே கால்நடை தீவனப் போருக்கு மர்மநபர்கள் தீ வைப்பு

 

அந்தியூர்,ஜூன்11: அந்தியூர் அருகே உள்ள விராலிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(60) .இவர் கூலி வேலை செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது கால்நடைகளின் தீவனப் போரில் நேற்று மதியம் மர்ம நபர்கள் தீ வைத்தில் தீவனத் தட்டுபோர் தீ பற்றி எரிந்தது.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். கடந்த மாதம் இவரது மாட்டு கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அந்தியூர் அருகே கால்நடை தீவனப் போருக்கு மர்மநபர்கள் தீ வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: