ஜூன் 13 முதல் அமலுக்கு வருகிறது வாகன ஓட்டுநர் உரிமம் பெற இணைய வழியில் மருத்துவ சான்று

நாகர்கோவில், ஜூன் 11: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 8(3) ன் படி பதிவுப் பெற்ற மருத்துவ அலுவலரிடம் மருத்துவ சான்று பெற வேண்டும். மருத்துவர்கள் தாங்களே இம்மென்பொருளில் உள்ளீடு செய்து விண்ணப்பதாரரின் மருத்துவ சான்றினை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையவழியில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மருத்துவ சான்று மட்டுமே பரிசீலிக்கப்படும் இணையம் அல்லாத வழியில் வழங்கிய மருத்துவச்சான்று ஏற்றுக் கொள்ள மென்பொருளில் வழியில்லை. எனவே மருத்துவ சான்று வழங்கும் மருத்துவர்களுக்கு வரும் ஜூன் 11ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு பயிற்சி வழங்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தகவல் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி முதல் இச்செயல்முறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாகர்கோவிலில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 13 முதல் அமலுக்கு வருகிறது வாகன ஓட்டுநர் உரிமம் பெற இணைய வழியில் மருத்துவ சான்று appeared first on Dinakaran.

Related Stories: