விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற திமுக உறுப்பினர் புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி ஆகும்.

வேட்புமனுக்கள் மீது 24-ம் தேதி பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற 26-ம் தேதி கடைசிநாள். ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது; விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; விக்கிரவாண்டி இடைதேர்தல் பாதுக்காப்பிற்காக துணை ராணுவம் தமிழ்நாடு வரும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு தனி வாக்கு இயந்திரங்கள் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்திய இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு பயன்படுத்த மாட்டோம். வாக்காளர்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும். நாம் தமிழர், விசிகவின் அதிகாரப்பூர்வ சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று கூறினார்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: