நாகை மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: கலெக்டர் தகவல்

 

நாகப்பட்டினம்,ஜூன்10: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை நடைபெறும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை தோறும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும். வேதாரண்யம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாவது வெளிக்கிழமை தோறும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நடைபெறும்.

எலும்பு முறிவு மருத்துவர்கள், மன நல மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் என அனைத்து சிறப்பியல் மருத்துவர்கள் கொண்டு இந்த முகாம் நடைபெறவுள்ளது. எனவே அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சமீபத்திய புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்களர் அடையாள அட்டை நகல் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்ட அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகை மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: