வங்கிக் கடன் வழங்க கோரிக்கை

 

ராமேஸ்வரம், ஜூன் 10: மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை இன்றி வங்கிக் கடன் வழங்க வேண்டுமென ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் தாலுகா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தாலுகா பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாலுகா தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் ஞானமுத்து, ராமநாதன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா குழு உறுப்பினர் லெட்சுமணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடுகள். வீட்டுமனை பட்டா மற்றும் சிறு தொழில் தொடங்க நிபந்தனை இன்றி மானியத்துடன் வங்கி கடன் வழங்குதல் வேண்டும் என பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post வங்கிக் கடன் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: