நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல் காந்தி!

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது; “ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண், 67 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. மோடி பதவியேற்பதற்கு முன்பாகவே நீட் தேர்வு முறைகேடு 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது.

“மோடி அரசு பதவியேற்கும் முன்பே நீட் தேர்வில் நடந்த முறைகேடு 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை குலையவைத்துள்ளது. ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பல மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க, காங்கிரஸ் சிறந்த திட்டத்தை முன்வைத்தது. மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன் என உறுதி அளிக்கிறேன். இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் குரல் நெறிபடுவதை இந்தியா கூட்டணி அனுமதிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

 

The post நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Related Stories: