பாம்பன் சாலை பாலத்தில் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு இணைப்பு பிளேட்டுகள் சரிசெய்யப்படுமா?

 

ராமேஸ்வரம், ஜூன் 8: ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் சாலை பாலத்தின் மைய பகுதியில் இரும்பு இணைப்பு பிளேட்டுகள் உள்ளன. இவை அடிக்கடி சேதமடைந்து தேசிய நெடுஞ்சாலை துறையினரால் சரிசெய்யப்படும். இந்த இரும்பு பிளேட்டுகள் சாலையின் இருபுறமும் உள்ள நடைமேடைகள் வரை பொருத்தப்பட்டிருக்கும். இதில் வடக்கு பக்க நடைமேடையில் உள்ள இரும்பு பிளேட் சேதமடைந்து சமநிலையில் இல்லாமல் வெளியே பெயர்ந்து கிடக்கிறது.

இதனால் கடல் அழகை ரசிக்க நடைமேடையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கால் தடுக்கி தடுமாறி செல்கின்றனர். மேலும் சிலரின் கால்களில் ரத்த காயம் ஏற்பட்டு வேதனைக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் சாலை பாலம் இருளில் முழ்கி கிடக்கும்.

அந்த இடத்தில் செல்லும் அதிகமானோர் தடுக்கி சாலையில் விழுந்து அச்சம் அடைந்துள்ளனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் பாம்பன் சாலை பாலத்தின் நடைமேடையில் சேதமடைந்து கிடக்கும் இந்த இரும்பு இணைப்பு பிளேட்டுகளை உடனே சரிசெய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாம்பன் சாலை பாலத்தில் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு இணைப்பு பிளேட்டுகள் சரிசெய்யப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: