குலசேகரம் எஸ்ஆர்கே பள்ளியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு

குலசேகரம்,ஜூன் 8: குலசேகரம் எஸ்ஆர்கே இண்டர்நேஷனல் சீனியர் செக்கண்டரி பள்ளியும், எஎம்ஐஇ அகாடமியும் இணைந்து நீட் தேர்வு பயிற்சியளித்து வருகிறது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும் வெற்றிப் பெற்றுள்ளனர். மாணவர் ஆட்செலின் சுனித் 720 க்கு 663 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். மாணவி அக்சரா 592 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்களை எஸ்ஆர்கே கல்வி குழும தலைவர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் சுதாதேவி, முதல்வர் லதாதேவி, எ.எம்.ஐ.இ அகாடமி இயக்குநர் அனந்தூ மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

The post குலசேகரம் எஸ்ஆர்கே பள்ளியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: