தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் உலக சுற்றுசூழல் தின கொண்டாட்டம்

 

தஞ்சாவூர், ஜூன் 7: உலக சுற்று சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர சார்பில் உலக சுற்றுசூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் Er.S.விஜயபிரியா, உதவி பொறியாளர் Er.TT.அஜித்குமார் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

உலக சுற்று சூழலை பாதுகாப்பதன் மூலம் இந்த பூமியில் வாழக்கூடிய மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நம்முன்னோர்கள் நாம் அனைவருக்காகவும் பாதுகாத்த இந்த பசுமை பூமியினை நாம் அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும் என சிறப்புரையாற்றினர்.

மேலும் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் K.மோகன் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் V.செந்தில்குமார் ஆகியயோர் சுற்று சூழலை பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். இவ்விழாவில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டது.

The post தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் உலக சுற்றுசூழல் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: