உகாண்டாவுக்கு முதல் வெற்றி

கயாஜா: ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை ேபாட்டியின் 9வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உளள பப்பூவா நியூ கினியா-உகாண்டா அணிகள் களம் கண்டன. வெஸ்ட் இண்டீசின் கயானாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா பந்து வீச முடிவு செய்தது. அதனையடுத்து பேட்டிங் செய்த பப்பூவா தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் அசாத் வாலா 0, டோனி உரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மற்றவர்களும் கேப்டன் வழியை தொடர்ந்து அடுத்தடுத்து பவுலியன் திரும்பினர். அதனால் 19.1ஓவரில் 77 ரன்னுக்கு பப்பூவா பணிந்தது. அணியில் அதிகபட்சமாக ஹிரி ஹிரி 19பந்தில் 2பவுண்டரிகளுடன் 15ரன் எடுத்தார். உகாண்டா தரப்பில் அல்பேஷ், காஸ்மாஸ், மியாகி, நசுபுகா ஆகியோர் 2 விக்கெட் கைப்பற்றினர். அதனையடுத்து 78ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய உகாண்டாவும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

ஆனால் ரியாசத் அலி ஷா மட்டும் பொறுப்புடன் விளையாடி 56 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 33 ரன் விளாசினார். அவர் ஆட்டமிழந்த போது வெற்றிக்கு 3 ரன் மட்டு தேவைப்பட்டது. அதை கென்னத் வைசா 19வது ஓவரில் எடுத்தார். அதனால் உகாண்டா 18.2 ஓவரில் தான் 7 விக்கெட்களை பறிகொடுத்து 78ரன்னை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

உகாண்டா வீரர்கள் அலி நவோ, நோர்மன் வனுவா ஆகியோர் தலா 2 விக்கெட் வசப்படுத்தினர். வெற்றிக்கு காரணமாக ரியாசத் அலி ஷா ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் அறிமுக அணியான உகாண்டா உலககோப்பையில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. பப்பூவா அணி தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்துள்ளது.

The post உகாண்டாவுக்கு முதல் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: