அலையாத்திகாடு படகு துறையில் தூய்மை பணி

முத்துப்பேட்டை, ஜூன் 6: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அலையாத்திகாடு படகு துறையில் தூய்மை பணிகள் நேற்று நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அலையாத்திகாட்டுக்கு செல்லும் படகுத்துறை அருகே தமிழ்நாடு வனத்துறை துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் காந்த் உத்தரவின்படி அலையாத்திகாடு மற்றும் சதுப்பு நிலைப்பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்றது. இதற்கு வனச்சரக அலுவலர் ஜனனி தலைமை வகித்தார். வனவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராம்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் ஊராட்சி பணியாளர், மஸ்தூர் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று அப்பகுதியில் கிடந்த குப்பை கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்தினர். இந்த பணியில் லகூன் சாலை படகு துறை கோரையாறு கரையோரம் மற்றும் அலையாத்தி மரங்களுக்கு இடையே கிடந்த டன் கணக்கில் கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது. இதில் வனக்காப்பாளர்கள் சிவநேசன், ஷகிலா, இளையராஜா, வனக்காவலர்கள் மாரிமுத்து, நாகராஜன் கணேசன், வனக்குழு தலைவர் மாரிமுத்து மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

The post அலையாத்திகாடு படகு துறையில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: