கொல்லஞ்சி ஊராட்சி தலைவி குறித்து அவதூறு எஸ்பியிடம் மனு

கருங்கல், ஜூன் 6: கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி நல அமைப்பு சார்பில் அதன் மாவட்ட தலைவர் அஜித்குமார் தலைமையில் மாவட்ட எஸ்பியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கொல்லஞ்சி ஊராட்சி தலைவி சலோமி சோபிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமுக விரோதிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு செய்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

இதனால் ஊராட்சி தலைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர். மேலும் இது அவரது பொது வாழ்க்கையை கெடுக்க செயல்படுவதாகும். எனவே அவதூறு பரப்புகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post கொல்லஞ்சி ஊராட்சி தலைவி குறித்து அவதூறு எஸ்பியிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: