18வது மக்களவையில் பெண் எம்பிக்கள் 73 ஆக குறைந்தது

புதுடெல்லி: 18வது மக்களவை தேர்தலில் மொத்தம் 73 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது 2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பேரில் இருந்து 5 எண்ணிக்கை குறைவு ஆகும். 11 பெண் எம்.பி.க்களுடன் மேற்கு வங்கம் முன்னணியில் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 797 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். பாஜ சார்பில் 30 பேரும், காங்கிரஸ் சார்பில் 14, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11, சமாஜ்வாதி கட்சி சார்பில் 4, திமுக சார்பில் 3, ஐக்கிய ஜனதா தளம் 3, எல்ஜேபி(ஆர்) 2 பெண்களும் வெற்றி பெற்றனர். 17வது மக்களவையில் 78 பெண் எம்பிக்களும், 16 வது மக்களவையில் 64 பெண் எம்பிக்களும், 15வது மக்களவையில் 52 பெண் எம்பிக்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

The post 18வது மக்களவையில் பெண் எம்பிக்கள் 73 ஆக குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: