உன் சகோதரியாக இருப்பது பெருமை வெறுப்பை கொடுத்தவர்களுக்கும் நீ அன்பை பொழிந்தாய்… ராகுல் காந்தி பற்றி பிரியங்கா உருக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தை பாராட்டி காங்கிரஸ் பொதுசெயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “யார் உன்னை என்ன சொன்னாலும், எந்த முரண்பாடுகள் வந்தாலும் நீ ஒருபோதும் பின்வாங்கவே இல்லை. அவர்கள் உன் நம்பிக்கையை எவ்வளவு சந்தேகித்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. உன் மீது எவ்வளவு பொய் பிரசாரம் செய்தாலும் சத்தியத்துக்காக போராடுவதை நீ நிறுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் கோபத்தையும், வெறுப்பையும் உனக்கு பரிசாக தந்தார்கள். ஆனால் கோபமும், வெறுப்பும் உன்னை வெல்வதற்கு நீ அனுமதிக்கவில்லை. நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து அன்பு, கருணை, உண்மையுடன் போராடினீர்கள். உங்களை பார்க்க முடியாதவர்கள் இப்போது உங்களை பார்க்கிறார்கள். ஆனால் உங்களை எப்போதும் பார்த்து கொண்டுள்ள எங்களில் சிலர் நீங்கள் எந்த நேரத்திலும், மிகவும் துணிச்சலானவர் என்பதை அறிந்திருக்கிறோம். உனக்கு சகோதரியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உன் சகோதரியாக இருப்பது பெருமை வெறுப்பை கொடுத்தவர்களுக்கும் நீ அன்பை பொழிந்தாய்… ராகுல் காந்தி பற்றி பிரியங்கா உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: