ஒடிசா புதிய முதல்வர் தர்மேந்திர பிரதான்? ஓரிரு நாளில் பா.ஜ முடிவு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பிடித்த பா.ஜ ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து 24 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி தோல்வியை சந்தித்தது. அந்த கட்சி 51 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்தநிலையில் ஒடிசாவின் புதிய முதல்வராக தற்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒடிசா மாநில பாஜ தலைவர் மன்மோகன் சமல் இதுபற்றி கூறுகையில்,’ பா.ஜவின் நாடாளுமன்றக் குழு ஓரிரு நாட்களில் ஒடிசா புதிய முதல்வர் பற்றி முடிவெடுக்கும். ஏனெனில் ஒடிசாவில் பாஜவின் புதிய முதல்வர் ஜூன் 10ம் தேதி பதவியேற்பார் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். முதல்வர் தேர்வு பிரதமர் நிர்ணயித்த அளவுகோல்களின் அடிப்படையில் இருக்கும்’ என்றார். ஒடிசா முதல்வர் பதவிக்கான பட்டியலில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தவிர, பாஜ தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி, பாலாசோர் எம்பி பிரதாப் சாரங்கி ஆகியோரின் பெயர்களும் கட்சியால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post ஒடிசா புதிய முதல்வர் தர்மேந்திர பிரதான்? ஓரிரு நாளில் பா.ஜ முடிவு appeared first on Dinakaran.

Related Stories: