இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

 

கீழ்வேளூர், ஜூன் 5: கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுபதி அம்மன்கோயில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்க தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த மே 27ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மகாபாரதக் கதை பாடப்பட்டு வந்தது. முக்கிய நிகழச்சியாக நேற்று முன்தினம் காலை 18 நாள் யுத்தத்தில் கவுரவர்களும், பாண்டவர்களும் மடிந்து கிடக்கும் காட்சியை திரவுபதியம்மன் கண்டு களித்து தனது சபதம் நிறைவுற்றியதையடுத்து அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மாலை செருநல்லூர் திரவுபதியம்மன் கோயிலில் இருந்து இலுப்பூர் திரவுபதியம்மன் கோயிலுக்கு கொந்தம் (வேல்) எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் அருகே உள்ள தீமிதி திடலில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் திருவசா குளக்கரையில் இருந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் ஊர்வலவமாக வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து நேற்று தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணிமன்றத்தில் செய்திருந்தனர்.

The post இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: